‘சிறையில் யோகா வகுப்பு’ நடிகை ரியா சக்ரபர்த்தியின் சிறைநாட்கள் குறித்து அவரது வழக்கறிஞர் தகவல்
சுசாந்தின் காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி சிறையிலிருந்த போது சக கைதிகளுக்கு யோகா வகுப்புகளை எடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் புகாரில் கைதான நடிகை ரியா, 28 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.
சிறையில் சாதாரண கைதிகளை போலவே ரியாவும் இருந்ததாகவும், கொரோனா சூழலால் வீட்டு உணவு கிடைக்காததால் சிறை சூழலுக்கு ஏற்ப ரியா தன்னை மாற்றிக் கொண்டதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் ரியாவை வங்கப்புலி என புகழ்ந்துள்ள சதீஷ், தன் மீதான நன்மதிப்பை மீட்டெடுக்க போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர் போரை சந்திப்பது போல், தன்னை வீழ்த்த முயல்வோருடன் ரியா போரிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments