போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் : 13 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் அம்பானியின் தனிப்பட்ட சொத்துமதிப்பு 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது.
HCL நிறுவனர் சிவ நாடார் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி 4 ஆம் இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா 6 ஆம் இடத்திலும், பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மித்தல் ஆகியோர் முறையே 7 முதல் 10 வரை இடங்களில் உள்ளனர்.
#ForbesIndiaRichList2020 is now LIVE! Mukesh Ambani remains the richest man in India 13th year in a row; majority of the wealthiest got richer in the last one year. Check out India's 100 richest https://t.co/Y5G3bdSIBS pic.twitter.com/eZlSdlK79w
— Forbes India (@forbes_india) October 8, 2020
Comments