நாட்டில் முதன்முறையாக 1,32,000 பேருக்கு டிஜிட்டல் பட்டாக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி
நாட்டில் முதன்முறையாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு டிஜிட்டல் பட்டாக்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைக்க உள்ளார்.
ஊரகப்பகுதிகளில் நிலப்பட்டா இல்லாமல் வாழ்வோருக்குப் பட்டா வழங்கும் திட்டத்தை ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி நிலமற்றவர்கள் வாழும் பகுதிகளை டிரோன்கள் மூலம் படம்பிடித்து அவர்களுக்கு டிஜிட்டல் பட்டா வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக அரியானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் 763 ஊர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு டிஜிட்டல் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன. ஆதார் அட்டை வடிவிலான பட்டாக்களை ஞாயிறன்று பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைக்க உள்ளார்.
Comments