'எங்களையே கேள்வி கேட்பியா?' - பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர்!

0 3256

சென்னையில் பீர் பாட்டிலால் உதவி காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்த தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே சர்வீஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் கடந்த 4-ம் தேதி இரவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். பணி முடித்து அந்த வழியே தன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆதம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் இதைத் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால், கோபமடைந்த போதை ஆசாமிகள் தங்கள் கையிலிருந்த பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளர் மோகன்தாஸின் மண்டையை உடைத்துள்ளர். அதோடு, அவரின் இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போன் ஆகியவற்றைப் பிடுங்கி சென்று விட்டனர்.

உதவிக்கு யாருமில்லாத நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட மோகன்தாஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தானே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவருக்குத் தலையில் 10 தையல்களும் புருவத்தில் 3 தையல்களும் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் மோகன்தாஸ் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போதை ஆசாமிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகன்தாசை தாக்கியது ஆலந்தூரைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் அஜித்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், வினோத்குமார் 162 -வட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments