சிபிஐ முன்னாள் இயக்குநரும், மாநில ஆளுநருமாக இருந்த அஸ்வனி குமார் தற்கொலை: போலீஸ் தகவல்
சிபிஐ முன்னாள் இயக்குநரும், மாநில ஆளுநருமாக இருந்த அஸ்வனி குமார் சிம்லாவில் உள்ள தமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
அவர் கடந்த சில தினங்களாக மனஅழுத்தத்தில் இருந்த தாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளதாகவும் சிம்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அஸ்வனி குமார் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இமாச்சல் டிஜிபி ஆக 2006 முதல் 2 ஆண்டுகள் இருந்தார்.
நாட்டை உலுக்கிய டெல்லி ஆருஷி தன்வார் கொலை வழக்கை அவர் இயக்குநராக இருந்த போது சிபிஐ விசாரித்தது.
பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் 2013-14 காலகட்டத்தில் நாகாலாந்து ஆளுநராக இருந்த அவர் அப்போது மணிப்பூர் ஆளுநர் பொறுப்பையும் சிறிது காலம் வகித்தார்
Comments