ரஷ்யாவின் தடுப்பு மருந்தைப் பெருமளவில் சோதிக்க இந்தியா அனுமதி மறுப்பு
கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைப் பெரும் எண்ணிக்கையிலான ஆட்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்தவும், மருந்தை விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
இதையடுத்துப் பெரும் எண்ணிக்கையிலான ஆட்களுக்கு மருந்தைச் செலுத்தி மூன்றாம் கட்டச் சோதனையை மேற்கொள்ள இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் விண்ணப்பித்திருந்தது.
அதற்கு அனுமதி மறுத்துள்ள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, குறைந்த எண்ணிக்கையிலானோரிடம் சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
India declines proposal to test Russia #Covid19 vaccine #SputnikV in large study https://t.co/7N8Ep8CEYG pic.twitter.com/vq1VNzIVS1
— Mint (@livemint) October 8, 2020
Comments