பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் கனமழை பெருவெள்ளம்: வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் இம்மானுவேல் மேக்ரன் நேரில் பார்வை
பிரான்ஸ் நாட்டில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அந்நாட்டு அதிபர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தென்கிழக்கு ஆல்ப்ஸ் பகுதியில் உண்டான புயலால் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால் 5 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீட்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்ட அவர், வெள்ளம் ஒரு பேரிடர் என்று அரசு அறிவிக்கும் என்றும் உறுதியளித்தார்.
Comments