அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும் மைக் பென்சும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.
ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரவல் பற்றி தெரிந்தும் தடுக்கத் தவறிவிட்டதாக கூறிய கமலா ஹாரிஸ் டிரம்ப் அரசுக்கு இது மிகப்பெரிய தோல்வி என்றும் கூறினார்.
இன்று வரை கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரு திட்டமும் டிரம்ப் அரசுக்கு இல்லை என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மைக் பென்ஸ் தமது விவாதத்தில் சீனா உலகிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டினார். சீனாவுக்கு விமானப் போக்குவரத்தை அரசு தடை செய்த போது அதனை ஜோ பைடன் எதிர்த்ததாகவும் மைக் பென்ஸ் தெரிவித்தார்.
Pence and Harris face off in vice presidential debate #VPDebate https://t.co/vmWgsBzJqp
— Reuters (@Reuters) October 8, 2020
Comments