பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் 4வது சுற்று முடிவுகள்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 1066
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் 4வது சுற்று முடிவுகள்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீசில் நடைபெறும் தொடரின் 4வது சுற்றில், ஸ்பெயினின் கரேனோ புஸ்டாவை  எதிர்கொண்ட ஜோகோவிச், 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 10வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில், கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா க்விடோவா 6-3 6-3 என்ற நேர் செட்களில், ஜெர்மனின் லாரா சீக்மண்டை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments