மெக்ஸிகோவில் நிலை கொண்டிருந்த டெல்டா புயல் : கான்கன் பகுதியில் கரையைக் கடந்தது
மெக்ஸிகோ கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த டெல்டா புயல் நேற்று அந்நாட்டின் கான்கன் பகுதியில் கரையைக் கடந்தது.
மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சில வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
புயல் காரணமாக கனமழை பெய்தது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
கடலிலிருந்து எழுந்த அலைகள் பல அடி உயரத்திற்கு வீசின.
கடற்கரைப் பகுதியிலிருந்த ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புயல் அடுத்த சில தினங்களில் அமெரிக்காவைத் தாக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments