ரூ.2000 கோடி மதிப்புடைய கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாக்களை முடக்கிய வருமானவரித்துறை
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, கொடநாடு எஸ்டேட் பங்களா, சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை முடக்கியுள்ள வருமானவரித்துறையினர், அதற்கான நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
2017ஆம் ஆண்டு 187 இடங்களில் நடைபெற்ற வருமானவரிச் சோதனைக்குப் பின்னர், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 1800 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் லதா, கிராம அதிகாரி சத்யா ஆகியோருடன் வந்த வருமான வரித்துறையினர் நோட்டீஸை படித்துக் காட்டி எஸ்டேட் சுவற்றில் ஒட்டிச் சென்றனர்.
இதேபோல் சிறுதாவூர் பங்களாவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தால், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கும், நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும், வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments