பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

0 1413
பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொதுப்பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு, இன்று தொடங்குகிறது.

வருகிற 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். ஆன்லைன் வாயிலாக 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஒவ்வொரு கட்ட கலந்தாய்வு முடிவிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி, வரும் 16- ஆம் தேதி வரை நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments