லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் குழந்தையுடன் சடலமாக மீட்பு

0 6013
லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் குழந்தையுடன் சடலமாக மீட்பு

மலேசிய தமிழ் தம்பதி, லண்டனில் வசித்து வந்த நிலையில், குழந்தையுடன், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வரும், ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார், மனைவியையும், குழந்தையையும் கொன்றுவிட்டு, கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு, அந்த நபர் மாண்டிருக்கலாம் என ஐயம் எழுவதாக தெரிவித்திருக்கின்றனர்.

மலேசிய தமிழரான 42 வயது குகராஜ் சிதம்பரநாதன், 36 வயதான மனைவி பூர்ணா காமேஸ்வரி, 3 வயதான மகன் கைலாஷ் உடன், லண்டனில் வசித்து வந்துள்ளார்.

தம்பதியருக்குள், பின்னிரவைத் தாண்டியும் அவ்வப்போது, தகராறு ஏற்படுவது வழக்கம் என்கின்ற நிலையில், மூவரும் சடலமாக கிடந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments