மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
கொரோனா தொற்றுநோயால் அடுத்த ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் - உலக வங்கி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அடுத்த ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி விடுத்துள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்றுநோய் இந்த ஆண்டு 8.8 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும் என்றும், அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையால் உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமையில் விழக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, நாடுகள் கொரோனாவுக்குப் பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Comments