மாரி -2 பட வில்லன் நடிகருக்கு படப்பிடிப்பில் பலத்த காயம் - அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

0 3850

படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மாரி - 2 படத்தில் வில்லனாக நடித்த அவர், மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் இப்போது காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியின் போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வயிற்றுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சினிமா செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments