சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - தேவசம் போர்டு அறிவிப்பு

0 1648

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஐப்பசி மாத பூஜையின் போது, குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பக்தர்களை அனுமதிக்க அந்த மாநில சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வருகிற 16 ஆம் தேதி தொடங்க உள்ள ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments