அடல் குகைவழிப் பாதையில் புகைப்படம் எடுக்கவும், வீடியோ ஒளிப்பதிவு செய்யவும் தடை

0 2453
இமாச்சலப் பிரதேசத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அடல் குகைவழிப் பாதையில் புகைப்படம் எடுக்கவும், வீடியோ ஒளிப்பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில், அடல் சுரங்கப்பாதையில்,பயணிப்போர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அடல் சுரங்கப்பாதையில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட, அதிவேகத்தில் செல்வதோ, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதோ, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையின், உட்புறமோ, அல்லது, அவற்றின் நுழைவு வாயில் பகுதியிலோ, செல்பி, புகைப்படம், வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை தொடங்குவதற்கு 200 மீட்டரிலிருந்தே, இந்த தடை விதிக்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகள், விதிகளை மீறி, சுரங்கப்பாதையில் வாகனத்தை நிறுத்தி, செல்பி, போட்டோ உள்ளிட்டவற்றை எடுத்ததால், 3 விபத்துகள் நிகழ்ந்தன. இதையடுத்து, குலு மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments