சட்டவிரோதமாக மாணவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்ததாகப் புகார் : 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்
கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை சட்டவிரோதமாக மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த புதுச்சேரியைச் சேர்ந்த 6 மருத்துவ கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்காமல் சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கம் செய்து இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அந்த வகையில் அறுபடை வீடு மருத்துவ கல்லூரி, வினாயகா மிஷன் மருத்துவ கல்லூரி, ஸ்ரீமகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, மணகுள விநாயகர் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மாணவர் சேர்க்கைக்கு கருணை காட்டினால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments