முகக்கவசம், கையுறை அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் என்ன ? உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 2929
முகக்கவசம், கையுறை அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் என்ன ? உயர்நீதிமன்ற மதுரை கிளை

முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பின்பற்றாதோர் ஆகியோரைக் கைது செய்தால் என்ன? என்றும், அபராதத் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2ஆயிரம் ரூபாயாக உயர்த்தினால் என்ன என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினா எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டால் தானும், தன் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவோம் என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்புக்கான வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றச் செய்ய என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது எனத் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments