ஆன்லைன் கல்வி: மலை கிராமத்தில் செல்போன் டவர்... கொரோனா கால ஹீரோ உதவி

0 3677

இந்தி, தமிழ் உள்பட பல மொழிகளில் வில்லனாக நடித்து வருபவர் சோனுசூட். இந்த கொரோனா சோனு சூட்டை மக்களிடத்தில் ஹீரோவாக அடையாளப்படுத்தியது. அதாவது, கொரோனா காலத்தில் நாடு முழுக்க பல மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளார் சோனு சூட். அந்த வகையில், சோனு சூட் சமீபத்தில் செய்த காரியம் ஒன்று மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஹரியானாவில் மோர்னி மலை பகுதியில் தபானா என்ற கிராமத்தில் பள்ளி சிறுமி ஒருவர் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு செல்போன் சிக்னலுக்காக போராடிக் கொண்டிருக்கு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது. பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டை டேக் செய்து இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த சோனுசூட் உடனடியாக மோர்னி மலைப்பகுதி மாணவ மாணவிகள் படிப்புக்கு உதவ முன்வந்தார். ஏர்டெல் நிறுவனத்துக்காக செல்போன் டவர்கள் அமைத்து கொடுக்கும் இன்டஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தன் நண்பருமான ககன் கபூரை அணுகி மோர்னி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தபானா கிராமத்தில் செல்போன் டவர் அமைப்புக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, பணி நிறைவடைந்ததையடுத்து, இந்த கிராமத்தில் தற்போது நல்லமுறையில் சிக்னல் கிடைக்க தொடங்கியுள்ளது. இதனால், மோர்னி கிராம மாணவ மாணவிகள் மிகுந்த மகிச்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து சோனு சூட் கூறுகையில் , குழந்தைகள் அடிப்பைடை கல்வியை பெற இவ்வளவு கஷ்டப்படுவது என் மனதை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. அதனால்தான்,எவ்வளவு வேகமாக செல்போன் டவர் அமைக்க முடியுமோ. அவ்வளவு வேகமாக செயல்பட்டோம் என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments