பினாமி தடுப்பு சட்டத்தின் படி சசிகலாவின் சுமார் ரூ.2000 கோடி சொத்துகள் முடக்கம்

0 24299
சசிகலாவுக்குச் சொந்தமான, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய, கொடநாடு எஸ்டேட் பங்களா, சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, கொடநாடு எஸ்டேட் பங்களா, சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை முடக்கியுள்ள வருமானவரித்துறையினர், அதற்கான நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

2017ஆம் ஆண்டு 187 இடங்களில் நடைபெற்ற வருமானவரிச் சோதனைக்குப் பின்னர், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 1800 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் பங்களா, சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை, புதன்கிழமையன்று முடக்கிய வருமானவரித்துறையினர், அதற்கான உத்தரவு நகலையும், இரண்டு இடங்களிலும் ஒட்டியுள்ளனர்.

இதுதவிர, உயர்நீதிமன்றத்தால், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கும், நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும், வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments