இலவச மின்சாரம் கேட்டு 19 ஆண்டுகள் காத்திருந்த விவசாயி... அவரிடமும் கை நீட்டிய பெண் அதிகாரி அதிரடி கைது

0 11606

இலவச மின்சார இணைப்புக்காக 19 ஆண்டுகள் காத்திருந்த விவசாயிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓசூர் அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவர் தன் நிலத்துக்கு இலவச மின்சாரம் கேட்டு கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 2001- ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். தற்போதுதான் , அவருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயி வெங்கடேசன் தன் நிலத்துக்கு இலவசன மின்சாரம் தருமாறு கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் தென்னரசியை அணுகியுள்ளார். அப்போது, தென்னரசி 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டால்தான் இணைப்பு கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரம் பணத்தை விவசாயி வெங்கடேசனிடம் கொடுத்து இளநிலை பொறியாளர் தென்னரசியிடம் முன்பணமாக கொடுக்க வைத்துள்ளனர். விவசாயிடம் இருந்து தென்னரசி பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து , தென்னரசியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விண்ணப்பித்து 19 வருடங்கள் இலவச மின்சாரத்துக்காக காத்திருந்த விவசாயிடத்திலும் கை நீட்டிய தென்னரசி இப்போது கம்மி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments