'எனக்கு பொண்ணு தர மாட்டியா?'- காதலித்த பெண்ணின் தாயை வெட்டிக்கொலை செய்த 38 வயது லாரி டிரைவர்!

0 6942

கோபிசெட்டிபாளையத்தில் மகளை திருமணம் செய்துதர மறுத்த தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. இவரின் கணவர் தமிழ்தாசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உண்டு. மூத்த மகள்கள் இரண்டு பேருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. மேரி அந்த பகுதியில் தள்ளுவண்டியில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். மேரியின் திருமணமாகாத மூன்று மகள்களும் தாசம்பாளையத்தில் உள்ள தனியார் நுற்பாலையில்  வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு மேரியின் வீட்டுக்கு இரண்டாவது மகள் அன்னமேரி தன் கணவருடன் வந்திருந்தார். மூன்று பேரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த முருகன் என்பவர் , 'உன் மகளை எனக்குக் கல்யாணம் செய்து தர மறுக்கிறாயா?' என்று கத்தியவாரே அரிவாளை எடுத்து மேரியை வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் முருகனைத் தடுக்க முயன்றனர். இதில், கணேசன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. மேரியும் கணேசனும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து, அங்கிருந்து முருகன் தப்பி ஓடி விட்டார். கோவை மருத்துவமனையின் சிகிச்சை பலனின்றி மேரி இறந்து போக, கணேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வழக்குப்பதிவு செய்த கோபிச்செட்டி பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய முருகனைத் தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், பர்கூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது முருகன் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். மேரியின் 19 வயது மகளை கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தலையாகக் காதலித்தும் வந்துள்ளார். மேரியிடம் பெண் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்க மறுத்ததால், இந்த கொலை நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments