அமெரிக்கா பனிப்போர் மனப்பான்மையை கைவிட வேண்டும்: நான்கு நாடுகள் சந்திப்பின் எதிரொலியாக டோக்கியோ சீன தூதரகம் அறிக்கை
அமெரிக்கா, பனிப்போர் மனப்பான்மையை கைவிடுவதுடன், சீனா மீதான தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.
டோக்கியோவில் நடந்த 4 நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இந்திய-பசிபிக் மற்றும் யூரோஏசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்காவுடன், இந்தியா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதை சுட்டிக்காட்டியுள்ள ஜப்பான் சீன தூதரகம், மைக் போம்பியோ, சீனாவின் பெயருக்கு இழிவு ஏற்படுத்தும் வகையிலான அரசியல் மோதலை தொடர்ந்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
Comments