வடகொரிய தொழிலாளர் கட்சி துவங்கப்பட்டதன் 75வது ஆண்டு தின கொண்டாட்டம்: அஞ்சல் தலை கண்காட்சி, மின்விளக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
வடகொரியாவில் தொழிலாளர் கட்சி துவங்கப்பட்டதன் 75வது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில் அஞ்சல் தலை கண்காட்சியும், மின்விளக்கு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்த அஞ்சல் தலை கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அதே போல் பியாங்யாங் பகுதியிலுள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சுவர்களில் 3டி படங்கள் மூலம், "Wonders of Light-2020" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மின்விளக்கு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments