பொறுப்பற்ற சுற்றுலா பயணிகளால் அடல் சுரங்கப்பாதையில் 3 நாள்களில் 3 விபத்துகள்

0 66028
பொறுப்பற்ற சுற்றுலா பயணிகளால் அடல் சுரங்கப்பாதையில் 3 நாள்களில் 3 விபத்துகள்

பிரதமர் மோடியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையில் 3 நாட்களில் 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்ட 3 நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயலால் 3 விபத்துகள் ஏற்பட்டதாக சுரங்கப்பாதையின் தலைமை பொறியாளர் புருசோத்தமன் தெரிவித்தார். வாகனத்தை நிறுத்தி செல்பி எடுப்பது போன்றவையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments