பிரெஞ்சு ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் மகளிர் போட்டியில் எழுந்துள்ள மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் சட்டத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனைகள் ஆன்ட்ரூ மிடு, பேட்ரிசியா மேரியா டிக் ஜோடியும், ரஷ்ய வீராங்கனை யானா சிசிகோவா, அமெரிக்கா வீராங்கனை மேடிசன் பிரங்கிள் இணையும் மோதின.
இதில் ருமேனியா ஜோடி வெற்றி பெற்ற நிலையில், அதில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments