மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் தினசரி 1000 பக்தர்களுக்கு அனுமதி

0 10985
மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு தினசரி ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு தினசரி ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நிபுணர்குழு ஆய்வு செய்த அளித்த அறிக்கை குறித்து பேசிய அவர், 10 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசனம் செய்யலாம் என்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

நிபுணர்குழு பரிந்துரைகள் குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments