ஹார்ட்வேர்ஸ் கடைக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்..! கொள்ளை முயற்சி என புகார்

0 2963

சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் பட்டபகலில் ஹார்ட்வேர் கடைக்குள் புகுந்த இருவர் கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடைக்குள் புகுந்து தாக்கிய இரு இளைஞர்களையும் வியாபாரிகள் மடக்கி பிடிக்க முயன்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் லெட்சுமி ஏஜென்ஸிஸ் என்ற பெயரில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்திவருபவர் ஜெயக்குமார். இவரது கடைக்கு வந்த இரு இளைஞர்கள் தங்களை மேஸ்திரி குமார் அனுப்பியதாக கூறி பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி கைகலப்பானது.

இந்த கைகலப்பை பயன்படுத்தி மேஸ்திரியின் கையாள் ஒருவன் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளான், அதனை தடுத்த ஜெயக்குமாரையும், அவரது மருமகனையும் இருவரும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இருவரது தாக்குதலையும் சமாளித்து அவர்களை மடக்கிப்பிடித்து கடையில் இருந்து வெளியே தள்ளி வந்தார் ஜெயக்குமார்

தாக்குதலில் ஈடுபட்டு பெயிண்டு டப்பாக்களை தள்ளிவிட்ட அவர்கள் இருவரையும் போலீசில் பிடித்து ஒப்படைக்க முயன்ற நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை போலீசில் ஒப்படைத்த வியாபாரி ஜெயக்குமார், தனது கட்டிடத்துக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள மேஸ்திரி குமார் என்பவர் பணியை ஒழுங்காக செய்யாமல் பணம் கேட்டதாகவும், அதனை கொடுக்க மறுத்த நிலையில் அவரது உறவினர்களான நவீன் , ஹரி ஆகியோரை ஏவி தாக்குதல் நடத்தி, கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக மாங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

பட்டபகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments