"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
உ.பி. பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்பாட்டம்: நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
சென்னை பெரம்பூர் இரயில் நிலையம் எதிரே நேற்று நடந்த ஆர்பாட்டத்துக்கு முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நடைபெற்ற அந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆர்பாட்டத்துக்கு முன் அனுமதி பெறாதது, தடையை மீறி ஒன்று கூடியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை குஷ்பு உட்பட 50 பேர் மீது செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments