'அரை மணி நேரத்தில் கொரோனா முடிவு' தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த புதிய பரிசோதனை முறை
வெறும் அரை மணி நேரத்திற்குள்ளாக கொரோனா முடிவுகளை அறிவிக்கும், பரிசோதனை முறையை, தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகளவில், RT-PCR கிட் மூலம் நடைபெறும் கொரோனா பரிசோதனை நடைமுறையே மிக துல்லியமானதாக கருதப்படுகிறது. இந்த பரிசோதனையில், முடிவுகள் வருவதற்கு, 24 மணி நேரம் வரை ஆகிறது.
இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள போகாங் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சென்சார் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான, கொரோனா பரிசோதனை நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம், வைரசின் ஆர்.என்.ஏ.களை ஆராய்ந்து, உடனடியாக அறிவிப்பதால், வெறும் 30 நிமிடங்களுக்குள்ளாக, கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments