பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு முடிவு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில், பாஜக மாநில தலைவர் பூபேந்திர யாதவ், பீகாருக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்ணாவிஸ் ஆகியோர் சந்தித்து பேசியபின்னர் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 243 இடங்களில், பாஜக 121 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிடும்.
ஜிதன்ராம் மஞ்சின் கட்சிக்கு 7 இடங்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியின் மற்றோர் முக்கிய கட்சியாக இருந்த லோக் ஜனசக்தி, பாஜக போட்டியிடும் இடங்களை தவிர்த்து, ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
Comments