இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தியின் நீதிமன்ற காவல் அக்.20 வரை நீட்டிப்பு

0 1230

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தியின் நீதிமன்றக் காவலை 20ம் தேதி வரை நீட்டித்து மும்பை  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் அவருக்கு போதைப் பொருளை காதலியும், நடிகையுமான ரியா, அவருடைய சகோதரர் சவிக் சக்ரவர்த்தி வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் கைதான அவர்கள் 2 பேர் உள்ளிட்டோரின்  நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவுக்கு வந்ததால்,  சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். 

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ரியா உள்ளிட்டோரின் காவலை மேலும் 14 நாள்கள் நீடித்து உத்தரவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments