பெரிய அளவிலான வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டே ஹத்ராஸ் இளம்பெண்ணின் உடல் நள்ளிரவில் தகனம்-உச்ச நீதிமன்றத்தில் உ.பி.அரசு தகவல்
பெரிய அளவிலான வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டே ஹத்ராஸ் இளம்பெண்ணின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இளம் பெண் உடலை தொடர்ந்து வைத்திருந்தால், கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு ஜாதி மோதல் வெடிக்கும் என தங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்களை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று நள்ளிரவு தகனம் நடந்ததாக கூறியுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் உடற் கூறாய்வு நடந்து 20 மணி நேரத்திற்கு பிறகே, தகனம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதில் வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் உத்தரபிரதேச அரசின் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments