கள்ளக்குறிச்சி எம்எல்ஏ திருமணம் செய்த பெண்ணின் தந்தை தொடுத்த ஆட்கொணர்வு மனு நாளை விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம்

0 3875
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ திருமணம் செய்த பெண்ணின் தந்தை தொடுத்த ஆட்கொணர்வு மனு நாளை விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாகவும், அவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி பெண்ணின் தந்தை தொடுத்த ஆட்கொணர்வு மனு மீது நாளை விசாரணை நடத்தப்படுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ பிரபு, சவுந்தர்யா என்ற கல்லூரி 2ம் ஆண்டு மாணவியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில், மகளை பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சுவாமிநாதன் வழக்கறிஞர் முறையிட்டபோது, அதன்மீது நாளை விசாரணை நடத்தப்படுமென உயர்நீதிமன்றம் அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments