இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒத்திகை
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நடத்திய ஒத்திகை கண்கவரும் வகையில் இருந்தது.
1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹின்டன் விமானப்படை தளத்தில் வரும் 8ம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு அங்கு இன்று ரபேல் போர் விமானம் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தேஜாஸ் இலகுரக போர் விமானம், வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி ஒத்திகையில் ஈடுபட்டது.
இதேபோல் போர் விமானம் ஒன்று வானில் இருந்து குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தியது. மேலும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றாக அணிவகுத்தன. பாராசூட் வீரர்களும் வானிலிருந்து குதித்து ஒத்திகை நடத்தினர்.
#WATCH Ghaziabad: Dhruv Advance light helicopters (ALH), part of IAF's Sarang team, create a heart in the sky during full dress rehearsal of IAF Day Parade at Hindon Air Force Station, ahead of Air Force Day on October 8 pic.twitter.com/QTiVtt1IcO
— ANI UP (@ANINewsUP) October 6, 2020
Comments