அசார்பைஜானுக்கு ஆயுத உதவி செய்த குற்றச்சாட்டில் துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கனடா இடைக்கால தடை
ஆர்மினியா-அசார்பைஜான் மோதலில் ஆயுத உதவி செய்த குற்றச்சாட்டில், துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கனடா அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
துருக்கி நாட்டின் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான பாய்க்கருக்கு, தாக்குதல் இலக்குகளை குறிவைக்க உதவும் இமேஜிங் கருவிகளை, கனடா நாட்டின் L3Harris Wescam விநியோகிக்கிறது.
இந்நிலையில், ஆர்மீனியாவுடன் போரில் ஈடுபட்டுள்ள அசார்பைஜான் வெளியிட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான வீடியோவில், L3Harris Wescam தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை, அசார்பைஜானுக்கு அதன் கூட்டாளி நாடான துருக்கி வழங்கியதாக சந்தேதிக்கும் கனடா, அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையடுத்து, துருக்கிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை கனடா நிறுத்திவைத்துள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments