ஆன்லைன் மூலம் தெருவோர உணவக உணவுகளை விற்க ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

0 4014
ஆன்லைன் மூலம் தெருவோர உணவக உணவுகளை விற்க ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

டெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் ஆன்லைன் மூலம் தெருவோர உணவகங்களின் உணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

டெல்லியில் காணொலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் தெருவோர விற்பனையாளர்கள் ஆத்ம நிபார் நிதி திட்டத்தின்கீழ்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர், வாரணாசி என 5 நகரங்களில் 250 தெருவோர உணவகங்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தபடுவதாகவும், பிறகு மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments