ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பேரணி நடத்திய திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது வழக்குப் பதிவு

0 2230
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பேரணி நடத்திய திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது வழக்குப் பதிவு

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த பேரணியில் பங்கேற்ற கனிமொழி உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கனிமொழி உள்ளிட 191 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments