தெலங்கானாவில் இருந்து உத்திரபிரதேசத்துக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 1010 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்
தெலங்கானா மாநிலத்தில் இருந்து உத்திரபிரதேசத்துக்கு கண்டெய்னர் லாரி மூலம், கடத்த முயன்ற ஆயிரத்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரங்கா ரெட்டி மாவட்டம் ரச்சகொண்ட பகுதியில் இருந்து, கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, முகமது ரம்ஜான் என்பவன் ஓட்டி வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, கண்டெய்னரில் அமைக்கப்பட்டு இருந்த, ரகசிய அறையில் இருந்து கட்டுக் கட்டாக கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments