பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாகத் தகவல்

0 3091
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாகத் தகவல்

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காணொலி வாயிலாக நடக்க உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளனர்.

இரு தலைவர்களும் கடந்த 6 ஆண்டுகளில் 18 முறைக்கு மேல் சந்தித்துள்ள நிலையில் லடாக் பிரச்னைக்குப் பின்னர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நவம்பர் 17க்கு முன் லடாக் பிரச்னை தீர்க்கப்பட்டால் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments