பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் இதுவரை ரூ.12.5 லட்சம் கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 954
பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் இதுவரை ரூ.12.5 லட்சம் கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் இதுவரை சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய், நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான காணொலி வாயிலான மாநாட்டில் பங்கேற்றவர், 7 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தியதன் மூலம் ஏழை மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இ-சந்தையை பயன்படுத்துவதாகவும், டிஜிட்டல் துறையில் அரசு நிர்வாகம் மேம்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY