ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

0 3031
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, தொடர்ந்து களமிறங்கிய தவான் -பிரித்வி ஷா ஜோடி டெல்லி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தது.

பிரித்வி ஷா 42 ரன்களில் வெளியேற, இறுதியில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஷ் 53 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியில் அதிகபட்சமாக, கேப்டன் கோலி 43 ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டும் சேர்த்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments