செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் - பிரதமர் மோடி

0 2338
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

சமூக முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பொறுப்பு என்ற கருப்பொருளுடன் ரெய்ஸ் ( RAISE) என்ற பெயரிலான மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, அடுத்த தலைமுறை நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார்.

நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கழிவு நீர் வெளியேற்றும் அமைப்பை மேம்படுத்தவும் அதனைப் பயன்படுத்தலாம் என்று கூறினார். ஆயதமயமாக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பூமியை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments