கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷூக்கு ஜாமீன்

0 3895
கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் மீதான வழக்கு, கொச்சி - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் முன், விசாரணைக்கு வந்தது. 60 நாட்கள் கடந்தும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஸ்வப்னா சுரேஷூக்கு ஜாமீன்வழங்கி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதே நேரம், தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வருவதால், சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுவிக்கப்பட மாட்டார்.

இதற்கிடையே, கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை நாளை சமர்ப்பிக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments