ஜிஎஸ்டி இழப்பீடாக இன்று இரவே ரூ.20,000 கோடி விடுவிக்கப்படும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி இழப்பீடு வரியாக பெறப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் இன்று இரவே மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக பெறப்பட்ட 24 ஆயிரம் கோடி ரூபாய், அடுத்த வாரம் இறுதியில் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதி செயலாளர் அஜய்பூஷன் பாண்டே,ஆண்டு வருவாய் 5 கோடி ரூபாய்க்குள் உள்ள சிறு வணிகர்கள், நிறுவனங்கள், மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்வதற்குப் பதில், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் காலாண்டுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தால் போதும் என்று தெரிவித்தார்.
Comments