திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனத்தில், மேலும் 3 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்தில், மேலும் 3 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தினந்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர விஐபி தரிசனம், கல்யாண உற்சவம் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் 300 ரூபாய் சிறப்பு விரைவு தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கூடுதலாக 3000 டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனிடையே 16 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது, நான்கு மாட வீதி உலாவில் பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படுதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Comments