தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்த இரட்டையர்கள்: பேரிடர் காலங்களில், மீட்பு பணிகளில் பயன்படுத்த திட்டம்
ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இரட்டையர்கள், அசாருதீன் மற்றும் நசுருதீன், தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இவர்கள், propeller மற்றும் காலி தண்ணீர் கேன்கள் பொறுத்தப்பட்டு, மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தண்ணீரில் செல்லக்கூடிய மிதவை சைக்கிளை இயக்கி அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
180 கிலோ எடை வரை இந்த சைக்கிள் தாங்கும் என தெரிவிக்கும் இவர்கள், பேரிடர் காலங்கள் மற்றும் நீர்நிலைகளில் மூழ்கியவர்களை மீட்க இது பயன்படும் என தெரிவித்தனர்.
Comments