அமேசான் ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று - அமேசான் நிறுவனம் தகவல்

0 2197
அமேசான் ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

அமேசான் ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மார்ச் 1 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தமுள்ள 13,72,000 முன்னணி ஊழியர்களில் 19,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இது மொத்த ஊழியர்களில் 1.44 சதவிகிதம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை விட அமேசானில் தொற்று அபாயம் 42 சதவீதம் குறைவாகவே இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத வாக்கில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments