காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்
பெண்ணை கடத்தி வந்து தான் திருமணம் செய்ததாக வரும் செய்தி தவறு என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அவரது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில், முறைப்படி பெண் கேட்டும் தரவில்லை என்பதால் தனது பெற்றோர் முன்னிலையில், செளந்தர்யாவின் முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்றும், செளந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்ததாக வரும் செய்தி வதந்தி என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
Comments